நாட்டை துண்டாடுவதற்கு இரா. சம்பந்தன் ஒரு போதும் உடன்படவில்லை- ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

 


கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப் படுத்திய பாராளுமன்ற உறுப்பினராக இருந்தும் நாட்டை துண்டாடுவதற்கு இரா. சம்பந்தன் ஒரு போதும் உடன்படவில்லை என்றும், பிரிக்கப்படாத இலங்கையில் அதிகாரப் பகிர்வுக்கே எப்போதும் அர்ப்பணிப்புடன் இருந்ததாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மறைந்த இரா. சம்பந்தனின் இறுதிக் கிரியையில் உரையாற்றும் போது ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்