மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகமானது 2024ம் ஆண்டுக்கான ஜனாதிபதி
சுற்றாடல் போட்டியில் அரச நிறுவனங்களுக்கான பிரிவில் பங்குபற்றி வெள்ளி
விருதினை பெற்றுக்கொண்டது.
கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மண்டபத்தில் கடந்த (28) திகதி இடம்பெற்ற நிகழ்வில்
வர்த்தக
மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் மண்முனை
தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் சட்டத்தரணி சிவப்பிரியா
வில்வரத்னத்திற்கு மேற்படி விருதை வழங்கி வைத்தார்.
சுற்றாடல்
அமைச்சின் வழிகாட்டலின் கீழ் மத்திய சுற்றாடல் அதிகாரசபையால் (CEA)
வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும் ஜனாதிபதி சுற்றாடல் விருதுகள்
நாடாளவிய
ரீதியில் அரச நிறுவனங்கள், பாடசாலைகள், பொது அமைப்புக்கள் என 902 பேர்
விண்ணப்பத்திருந்த நிலையில் நிபுணத்துவம் வாய்ந்த நடுவர் குழாமானது
விண்ணப்பங்களை தேர்வு செய்து பல்வேறு கட்ட பரிசீலனைகள் மூன்றிற்கு
மேற்பட்ட கட்டங்களில் தேர்வுகள், 11 வகைப்படுத்தலின் பின்னர் மண்முனை தென்
எருவில் பற்று பிரதேச செயலகம் அவற்றுக்குள் தெரிவு செய்யப்பட்டு விருது
வழங்கப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும்.
நாடலாவிய ரீதியில் இடம் பெற்ற
இப்போட்டிகளில் பிரதேச செயலக ரீதியில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச
செயலகம் வெற்றி பெற்று மாவட்டத்திற்கு பெறுமை செய்த்துள்ளது.