பெண்ணொருவரிடமிருந்து
10,000 ரூபா/= இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் மாத்தளை பகுதி காதி நீதிபதி
ஒருவர் கைது செய்யப்பட்டதாக இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு
தெரிவித்துள்ளது.
முறைப்பாடு செய்த திருகோணமலையைச் சேர்ந்த பெண் பராமரிப்பு மற்றும்
அவதூறுக்காக 80000/= நட்டஈடு கோரலுக்கான விண்ணப்பங்களை இந்த காதி
நீதிபதியிடம் பெற்றுக் கொள்ளும் போது, அதற்காக 50,000 ரூபா இலஞ்சமாக
கோரியுள்ளதோடு, அதில் 10,000 ரூபாவை வரக முற பிரதேசத்தில் உள்ள சந்தேக
நபரின் வீட்டில் உள்ள அலுவலகத்தில் வைத்து பெற்றுக் கொள்ளும்போது கைது
செய்யப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.
சந்தேகநபர் மாத்தளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.