தனது வீட்டையும் அதனைச் சூழவுள்ள பகுதியைச் சுற்றிலும் மோட்டார் சைக்கிள்களில் ஆயுதம் ஏந்திய கும்பல் ஒன்று இரவு வேளையில் பயணிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் சபாநாயகருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இவர்கள் முகத்தையும் தலையையும் ஆடைகளால் மறைத்துக்கொண்டும், தலைக்கவசம் அணிந்துகொண்டும், மோட்டார் சைக்கிள்களில் பயணிக்கும் சிசிடிவி கமரா காட்சிகள் தன்னிடம் இருப்பதாகவும் சிறீதரன் தெரிவித்துள்ளார்.