"எமது காலம்" பயணிக்கும் வரலாற்று அருங்காட்சியகம் 2024 ஜீலை 9 ஆம் திகதி
முதல் முதல் 16 ஆம் திகதி வரை - மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில்
நடைபெறவுள்ளது.
இவ் அருங்காட்சியகம் சொல்லும் செய்தியினை கதிரவன்
வீதி நாடகம் மூலம் மக்களுக்கு விழிப்பூட்டும் நிகழ்வு பல்வேறு இடங்களில்
இடம்பெற்று வருகின்றது.
காத்தான்குடி கடற்கரையில் காத்தான்குடி கலை
இலக்கிய கழகத்தின் ஒழுங்குபடுத்தலில் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள்
முன்னிலையில் "காலம் சொல்லும் கதை" எனும் கருப்பொருளில் கதிரவன் நிறுவனத்
தலைவர் கதிரவன் த.இன்பராசா தலைமையில் நகைச்சுவை நடிகர் த.பூபாலசிங்கம்
மற்றும் புதுவையூர் பு.தியாகதாஸ் ஆகியோரின் பங்குபற்றலுடன். கதிரவன் வீதி
நாடக நடிகர்களால் மிகச்சிறப்பாக இந்நாடகம் நிகழ்த்திக்காட்டப்பட்டது.
ஒரு
நாட்டின் பன்முகத்தன்மை, அடையாளம், மக்கள் வாழ்வு, பாரம்பரியம், வரலாறு
என்பற்றோடு நல்லிணக்கத்தின் அவசியம் பற்றி மிக எளிமையான விளக்கத்தோடு அவை
தொடர்வான அருங்காட்சியகம் இலங்கையின் வரலாற்று செழுமையை வெளிக்காட்டும்
விதமாக இம்மாதம் 9 ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரை நடக்க இருப்பதை மக்கள்
வந்து பார்ப்பதை தூண்டும் வகையில் வெளிக்காட்டினர்.