தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் 02 வயது குழந்தையொன்று உயிரிழந்தது.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் எல்பிட்டிய பொலிஸ் பிரிவில் இன்று (14) காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மத்தள திசையிலிருந்து கொட்டாவை திசை நோக்கி பயணித்த வேனின் டயரில் காற்று இறங்கியமை காரணமாக நெடுஞ்சாலையின் நடுவில் உள்ள பாதுகாப்பு வேலியில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் வேனில் பயணித்த மூன்று குழந்தைகள் படுகாயமடைந்து, எல்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அதில் பெண் குழந்தையொன்று உயிரிழந்தது.
கதிர்காமம் ஏழுமலை பகுதியைச் சேர்ந்த 02 வயதும் 02 மாத குழந்தையே இவ்வாறு மரணித்தது.
விபத்து இடம்பெற்ற போது வேனில் சிறுவர்கள் உட்பட 12 பேர் பயணித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை எல்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.