2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி ஹமாஸ் – இஸ்ரேல் போர் தொடங்கியதில் இருந்து கிட்டத்தட்ட 125 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாக என தற்போது அல்ஜசீரா தகவல் வெளியிட்டுள்ளது.
இதை பத்திரிகையாளர்களைப் பாதுகாப்பதற்கான குழு (The Committee to Protect Journalists) உறுதி செய்துள்ளது. இந்த 125 ஊடகவியலாளர்களில் 120 பலஸ்தீனியர்கள், 2 இஸ்ரேலியர்கள் மற்றும் 3 லெபனான் பத்திரிகையாளர்கள் அடங்குவர்.
இது தவிர, ஊடகவியலாளர்களில் 8 பேர் காயமடைந்து உள்ளனர். 9 பேர் காணாமலோ அல்லது சிறைபிடிக்கப்பட்டோ உள்ளனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்கா (358), கிரேட் பிரிட்டன் (281), பிரான்ஸ் (221) மற்றும் ஜெர்மனி (102) ஆகிய நாடுகள் அதிக எண்ணிக்கையிலான ஊடகவியலாளர்களை இதுவரை இஸ்ரேலுக்கு அனுப்பியுள்ளதாகவும் கடந்த வருடம் செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.