ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் 200 கலால் அனுமதிப் பத்திரங்களை வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதா?

 


ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் சட்டவிரோதமான முறையில் 200 கலால் அனுமதிப் பத்திரங்களை வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மதுபான உரிமதாரர் சங்கம் தேர்தல் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு ஒன்றை சமர்ப்பித்துள்ளது.

கலால் திணைக்களம் தற்போது 200க்கும் மேற்பட்ட புதிய கலால் அனுமதிப் பத்திரங்களை வழங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக எமக்கு தகவல் கிடைத்துள்ளது. மேலும், ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர், முந்தைய திகதியிட்டு சுமார் 6 புதிய உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை மதுபான உரிமதாரர் சங்கத்தின் உப தலைவர் பிரசன்ன விதானகே, குறிப்பிட்டுள்ளார்.