கடந்த வருடம் முழுவதும் சிறப்பாக தமது செயற் திறன்களை வெளிப்படுத்திய A,
B,C தர கமநல சேவை நிலையங்களுள் ஒவ்வொரு பிரிவிற்குமான மாவட்ட மட்ட, மாகாண
மட்ட மற்றும் தேசிய மட்ட போட்டிகள் இடம்பெற்றது.
C தர பிரிவைச்
சேர்ந்த கமநல சேவை நிலையங்களுக்கு இடையேயான போட்டியில் திருகோணமலை
மாவட்டத்தை சேர்ந்த திரு.து.தர்சானந்தன் (கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர்)
தலைமையிலான உப்புவெளி கமநல சேவை நிலையமானது மாவட்ட மட்டத்திலும் மாகாண
மட்டத்திலும் மட்டுமின்றி தேசிய மட்டத்திலும் முதல் இடத்தை பெற்றுள்ளது..