(கல்லடி செய்தியாளர் & செய்தியாசிரியர் )
கிழக்கிலங்கையில் வரலாற்றுச் சிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகளி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலய தேரோட்டம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ இன்று சனிக்கிழமை (03) இடம்பெற்றது.
இதனைக் கண்டு கழிக்க இலங்கையின் பல்வேறு பாகங்களிலுமிருந்து மக்கள் வருகை தந்து கலந்து கொண்டனர்.
இந்நிலையில் இவ்வாலய மகோற்சவம் 26 ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி,நாளை ஞாயிற்றுக்கிழமை (04) ஆடி அமாவாசை பிதிர்க்கடன் தீர்க்கும் புனித தினத்தில் நண்பகல் 12.00 மணிக்கு நடைபெறவுள்ள தீர்த்தோற்சவத்துடன் ஆலய உற்சவம் நிறைவுபெறவுள்ளது.