மட்டக்களப்பு அமிர்தகளி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலய தீர்த்தோற்சவம்- 2024.08.04


 

 

 

 

 




 

 

 



 

 






 






 





 

 

 

 






(கல்லடி செய்தியாளர் & செய்தியாசிரியர் )


கிழக்கிலங்கையில் வரலாற்றுச் சிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகளி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலய தீர்த்தோற்சவம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ,வேதபாராயணங்கள் ஒலிக்க,நண்பகல் 12.00 மணிக்கு அமிர்தகளி தீர்த்தக் குளத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (04) இடம்பெற்றது.

தமது தாய்,தந்தையரின் ஆன்ம ஈடேற்றத்திற்காகப் பிதிர்க்கடனைச் செலுத்தும் வகையில் பல்லாயிரக்கணக்கான பக்த அடியார்கள் வருகை தந்திருந்ததைக் காண முடிந்தது.

நேற்று முன்தினம் சனிக்கிழமை (03) விநாயகப் பெருமான் அழகு ரதம் ஏறி பக்த அடியவர்களுக்கு அருள்பாலித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இன்று இடம்பெற்ற தீர்த்தோற்சவத்துடன் ஆலய மகோற்சவம் கொடியிறக்கலுடன் நிறைவு பெற்றது.