FREELANCER
மட்டக்களப்பு கல்லடி ஈழத்து திருச்செந்தூர் முருகன் ஆலயத்தில் நடை பெற்று வரும் கும்பாபிஷேக நிகழ்வின் 48- நாளான இன்று இடம் பெற்ற சங்காபிஷேகத்தை முன்னிட்டு கல்லடி உப்போடை நொச்சிமுனை சித்தி விநாயகர் ஆலயத்தில் இருந்து மட்டக்களப்பு கல்லடி ஈழத்து திருச்செந்தூர் முருகன் ஆலயத்துக்கு பெண்கள் புதன்கிழமை (07) பாற்குடம் ஏந்திப் பவனியாகச் சென்றனர்.
இப் பாற்குடப் பவனியில் ஆயிரக்கணக்கான பெண்கள் மஞ்சள் நிற பட்டாடை அணிந்து கலந்து கொண்டனர் .
இவர்களால் எடுத்துச் செல்லப்பட்ட பால் ஆலயத்தில் விஷேட பூஜை நிகழ்த்தப்பட்டு அபிஷேகம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.