மடு அன்னையின் ஆவணி மாத திருவிழா திருப்பலி 15 ஆம் திகதி இன்று 6.15 மணிக்கு ஒப்புக் கொடுக்கப்படும் என மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தெரிவித்துள்ளார்.
அத்துடன் திருவிழாவில் கலந்து கொள்ளும் பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை மேலும் தெரிவித்துள்ளார்.