25 டிப்பர் வாகனங்கள் ஒரே நாளில் காவற்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் அதன் சாரதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

 


 

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான முறையில் மணல் மற்றும் மரங்களை கடத்தி சென்ற 25 டிப்பர் வாகனங்கள் ஒரே நாளில் காவற்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் அதன் சாரதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் – கண்டி நெடுஞ்சாலை மற்றும் யாழ்ப்பாணம் – மன்னார் நெடுஞ்சாலை வழியாக தொடர்ச்சியாக சட்டவிரோதமான முறையில் மணல் மற்றும் மரங்கள் டிப்பர் வாகனங்களில் கடத்தி செல்லப்படுவதாக காவற்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற தொடர் முறைப்பாடுகளை அடுத்து  வியாழக்கிழமை (29.08.24) கொடிகாமம் மற்றும் சாவகச்சேரி காவற்துறையினர் விசேட நடவடிக்கையை முன்னெடுத்தனர்.

 அதன் போது , உரிய அனுமதி பத்திரங்கள் இன்றி மணல் கடத்தி வந்த 24 டிப்பர் வாகனங்களும் , மரங்களை கடத்தி வந்த ஒரு டிப்பர் வாகனமும் காவற்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் , அதன் சாரதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட டிப்பர் வாகனங்களை காவல் நிலையங்களில் தடுத்து வைத்துள்ள காவற்துறையினர் , அதன் சாரதிகளிடம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், அவர்களை நீதிமன்றில் முற்படுத்தவும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.