நாடளாவிய ரீதியில் நீர் வசதியற்ற 48 பாடசாலைகளும் மின்சார வசதி இல்லாத 15 பாடசாலைகளும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பாதுகாப்பான நீர் வசதி இல்லாத 983 பாடசாலைகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மின்சாரம் இல்லாத பெரும்பாலான பாடசாலைகளில் நாற்பது அல்லது ஐம்பது குழந்தைகள் இருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.