5000 ரூபா போலி நாணயத்தாள்களுடன் நபர் கைது.

 


இரத்தினபுரி, நகைக்கடையொன்றில் தங்க நகை வாங்க சென்ற நபர் 5000 ரூபா போலி நாணயத்தாள்களுடன் கைதுசெய்யப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சந்தேக நபர் பதுளை சோனாதோட்ட பிரதேசத்தை சேர்ந்தவரெனவும் தங்க நெக்லஸ் வாங்குவதற்காக ஐயாயிரம் தாள் கட்டுகளை வைத்திருந்ததால் அவர்மேல் சந்தேகித்து பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட பின்னர், சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டார் விசாரணையில் தெரியவந்துள்ளது.