பேத்தியை பாலியல் தொந்தரவு செய்த தாத்தா கைது .

 


பத்து வயது சிறுமிக்கு ஒராண்டுக்கு மேலாக பாலியல் தொந்தரவு அளித்து வந்த சிறுமியின தாத்தாவை பொலிசார் கைது செய்துள்ளனர். 

கன்னியாகுமரியில் அறுபத்து ஏழு வயது மீனவரின் மகன் கடந்த சில வருடங்களுக்கு முன் உயிரிழந்தார்.

இதனை தொடர்ந்து மருமகள் தனது பெண் குழந்தையை மாமனாரிடம் ஒப்படைத்து விட்டு வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டார். 

பெண் குழந்தையை வளர்த்து வந்த தாத்தா, கடந்த ஒராண்டுக்கும் மேலாக 10 வயதான சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்து இருக்கிறார். 

இந்த நிலையில் சிறுமியை கவனிக்க முடியாததால், அரசு காப்பகத்தில் ஒப்படைத்து இருக்கிறார். சிறுமியின் உடலில் இருந்த காயங்கள் குறித்து விசாரணை நடத்திய போது, கடந்த ஓராண்டுக்கு மேலாக தாத்தா பாலியல் தொந்தரவு அளித்தது தெரியவந்ததை தொடர்ந்து பொலிசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.