எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தொடர்பான கருத்துக்கணிப்பு ஒன்றில்18 முதல் 29 வயதுக்குட்பட்டவர்களில் அதிகமானோர் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்கவிற்கு ஆதரவளிக்கவுள்ளதாக தெரியவந்துள்ளது.
குறித்த விடயமானது, இன்ஸ்டியுட் போர் ஹெல்த் பொலிசி (Institute For Health Policy) எனும் ஆய்வு நிறுவனம் மேற்கொண்ட கருத்து கணிப்பொன்றிலேயே தெரியவந்துள்ளது.
அதன்படி, ஜூன், ஜூலை மாதம் மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்புகளில் 18 முதல் 29 வயதுக்குட்பட்டவர்களில் அனுரகுமார திசநாயக்கவிற்கு 54 வீதமானவர்களும், சஜித் பிரேமதாசவிற்கு 35 வீதமானவர்களும், ரணில் விக்ரமசிங்கவிற்கு 9 வீதமானவர்களும் ஆதரவு வெளியிட்டுள்ளனர்.