மக்கள் ஆட்சி ஒன்றை அமைக்க முன் வாருங்கள் - தேசிய மக்கள் சக்தி கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார

 

வரதன்

 

 

 

 

 

எமது ஆட்சியில் கல்வி சுகாதாரம் விவசாயம் போக்குவரத்து சுற்றுலாத்துறை என்பன சிறப்பான முறையில் கட்டி எழுப்பப்படும் ஒன்றிணைந்து மக்கள் ஆட்சி ஒன்றை அமைக்க முன் வாருங்கள் - தேசிய மக்கள் சக்தி கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர்  அனுரகுமார திசநாயக்கா


இலங்கையில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மக்கள் தற்போது மாற்றத்தை வேண்டி நிற்கின்றனர்  அரசியல் பேதங்களினால் மக்கள் பிரிந்து நிற்கின்றனர் இந்த மாற்றத்திற்காக தான் தேசிய ஒற்றுமையான அரசியல் உருவாக்க வேண்டியுள்ளது எமது கட்சியினால் அமைக்கப்பட உள்ள அரசாங்கத்தில் புதிய மாற்றங்கள் உருவாக்கப்படவுள்ளன ,எமது மக்களுக்கு புதிய தேவைகள் உள்ளது ,  ஊழல் லஞ்சம் அற்ற அரசாங்கத்தை அமைக்க வேண்டியுள்ளது  இதன் மூலம் தான் நாட்டை அபிவிருத்தி பாதையில் கொண்டு செல்ல முடியும்


ஊழல் லஞ்சம் அற்ற ஒரு அரசாங்கத்தை ரணில் விக்கிரமசிங்கவால் அமைக்க முடியுமா நல்ல டீம் நம்மிடம் உள்ளதாக தெரிவித்துக் கொண்டு சட்ட விரோத செயற்பாடுகளை முன்னெடுப்பவர்களுடன் அவர் கூட்டணி அமைத்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் ஒரு நகர சபை குப்பை வண்டி,  மொட்டு கட்சியின் பக்கம் இருப்பவர்கள் இவருடன் இணைந்துள்ளார். இதுதானா  அரசியல் மொட்டு கட்சியின் தற்போது மூன்றாக பிளவடைந்துள்ளது . ஒரு தரப்பினர் மஹிந்தவுடன்   இன்னும் மற்ற தரப்பினர் ரணிலுடனும் ஏனைய தரப்பினர் குப்பை வண்டியுடன் இணைந்துள்ளனர் இதுதான் இவர்களின் அரசியல்


இவ்வாறான குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை எனது அரசாங்கத்தில் தான் தண்டிக்க முடியும் எமது நாட்டிற்கு நீதியான அரசாங்கம் ஒன்றின் மூலமே பாதாள உலகக் கோஷ்டியின் செயற்பாடுகளை தடுத்து நிறுத்த முடியும் தற்போது அரசியல் தலைவர்களுடன்  செயல்படுபவர்கள் இந்த பாதாள உலக கோஷ்டியினரே தற்போது நாட்டில் போதைப் பொருளுக்கும் மாணவர்களுக்கும் இடையில் சம்பந்தம் ஏற்பட்டுள்ளது. எமது ஆட்சியில் கல்வி சுகாதாரம் விவசாயம் போக்குவரத்து சுற்றுலாத்துறை என்பன சிறப்பான முறையில் கட்டி எழுப்பப்படும்


இதனை முன்னெடுப்பதற்கு தமிழ் மக்களின் முழுமையான ஆதரவினை வேண்டி நிற்கின்றேன் நம்பிக்கையுடன் உருவாக்கப்படுகின்ற தலைவர்கள் குறுகிய காலத்திலேயே மக்களை ஏமாற்றுகின்றார் ஆனால் எங்களது அரசாங்கத்தில் எல்லாரும் ஒன்றிணைந்து மக்கள் ஆட்சி ஒன்றை அமைக்க முன் வாருங்கள் என ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க இவ்வாறு கருத்து தெரிவித்தார்

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான தேசிய மக்கள் சக்தியின் பிரதான ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நேற்று இரவு வெற்றிக்கான மக்கள் சந்திப்பு எனும் தலைப்பின் கீழ் மட்டக்களப்பு நகரில் தனியார் விடுதி ஒன்றில் இடம் பெற்றது  தேசிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட கட்சி பிரதிநிதிகள் ஆதரவாளர்கள் பொதுமக்கள் இக்கூட்டத்தில் கலந்து சிறப்பித்தனர்.