பிரபல நடிகர் மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளரின் மனைவி என கூறிக்கொண்ட பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்தப் பெண் நேற்று (05) இந்தியாவில் இருந்து இலங்கை வந்த போது குடிவரவு குடியகழ்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
நிதி மோசடி குற்றச்சாட்டின் பேரில் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் அவருக்கு பயணத் தடை விதித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
வைத்தியர் என கூறிக்கொள்ளும் இந்த 37 வயதுடைய பெண் குருநாகல் பிரதேசத்தை சேர்ந்தவர் ஆவார்.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-192 இல் இந்தியாவின் புதுடில்லியிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த போது நேற்று (05) அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட பெண் விமான நிலைய பொலிஸாரால் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கொள்ளுப்பிட்டி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.