வட மேல் மாகாண சபையின் சிற்றுண்டிச்சாலை ஊழியர்களின் வருமானம், வாழ்வாதாரம் குறித்து ஆளுனர் நேரில் ஆய்வு









வட மேல் மாகாண  சபையின் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள சிற்றுண்டிச்சாலை ஊழியர்களின் வருமானம் மற்றும் வாழ்வாதாரம் குறித்து ஆளுனர் கௌரவ நஸீர் அஹமட் அவர்கள் நேரில் ஆய்வு செய்தார்.
வடமேல் மாகாணத்தில் உள்ளடங்கியுள்ள புத்தளம், குருநாகல் மாவட்டங்களில் தூரப்பிரதேசங்களில் இருந்து மாகாண அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களில் தங்களது தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக நாளாந்தம் நூற்றுக் கணக்கான மக்கள் மாகாண சபை அலுவலக வளாகத்திற்கு வந்துசெல்கின்றனர்.
இவர்களுக்கு குறைந்த விலையில் தரமான உணவுகள் வழங்கப்பட வேண்டும் என்பதை அடிக்கடி வலியுறுத்தி வந்த ஆளுனர் கௌரவ நஸீர் அஹமட் அவர்கள், இன்று திடீரென்று சிற்றுண்டிச்சாலையில் ஆய்வொன்றை  மேற்கொண்டார்
அத்துடன் சிற்றுண்டிச்சாலைக்கு வருகை தந்திருந்த பொதுமக்களின் கருத்துக்களையும் குறைபாடுகளையும் கேட்டறிந்து கொண்டார்.
மாகாண சபை அலுவலகத்தொகுதிக்கு வரும் பொதுமக்கள் மற்றும் அலுவலர்கள் தங்கள் பொருளாதார வசதிக்கேற்ப தரமான உணவுகளை உட்கொள்ளப் பொருத்தமான முறையில் சிற்றுண்டிச்சாலை செயற்படவேண்டும் என்பதை  ஆளுனர் கௌரவ நஸீர் அஹமட் தொடர்ந்தும் வலியுறுத்தினார்
அதற்கான வசதிகளை ஏற்படுத்துவதற்குத் தேவையான விடயங்கள் குறித்தும் சிற்றுண்டிச்சாலை ஊழியர்களிடம்  கேட்டறிந்து  கொண்டார். மேலும் சிற்றுண்டிச்சாலை ஊழியர்களின் வருமானம், அவர்களின் வாழ்வாதாரம் குறித்த விடயங்களையும் கேட்டறிந்து கொண்டார்.
இதன்போது தங்கள் சார்பில் சிற்றுண்டிச்சாலை உணவுகளின் தரம் மற்றும் வசதிகளை அதிகரிப்பதற்காக தங்களது சார்பில் முன்வைக்கப்பட்ட  கோரிக்கைகளை உடனடியாக ஏற்று அதற்கான உத்தரவுகளைப் பிறப்பித்த  கௌரவ ஆளுனருக்கு பொதுமக்கள் நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர்.