சர்வதேச ரீதியில் ஏற்படக்கூடிய எந்தவொரு சூழ்நிலையையும் எதிர்கொள்ள இலங்கை தயாராக உள்ளது

 


மத்திய கிழக்கு நாடுகளில் பதட்டமான சூழ்நிலை உருவாகும் பட்சத்தில் அதனைச் சமாளிப்பதற்கு மூன்று விசேட குழுக்களை ஜனாதிபதி ரணில்  விக்ரமசிங்க நியமித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான அலி சப்ரி தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் அலி சப்ரி இதனைத் தெரிவித்தார்.

இதன்போது ”சர்வதேச ரீதியில் ஏற்படக்கூடிய எந்தவொரு சூழ்நிலையையும் எதிர்கொள்ளத் தேவையான நடவடிக்கைகள் தற்போது எடுக்கப்பட்டுள்ளதாகவும் அலி சப்ரி மேலும் தெரிவித்துள்ளார்