சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான இன்று வெள்ளிக்கிழமை (30) தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத்தினரால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
குறித்த போராட்டமானது வவுனியா தபால் திணைக்களத்தின் அருகில் 2,750வது நாளாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் சுழற்சிமுறை போராட்டத்தில் ஈடுபடும் கொட்டகைக்கு முன்பாக இடம்பெற்றது.
இதன் போது எங்கே எங்கே உறவுகள் எங்கே கையில் ஒப்படைக்கப்பட்ட உறவுகள் எங்கே என்று கோஷங்களை எழுப்பியிருந்ததுடன், ஐரோப்பிய ஒன்றிய மற்றும் அமெரிக்க கொடிகளை தாங்கியவாறும், காணாமல் ஆக்கப்பட்ட தங்களது உறவுகளின் படங்களை ஏந்தியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.