மட்டு.கரவெட்டியில் யானைகள் அட்டகாசம்.






 

 

(கல்லடி செய்தியாளர்)

 

 



மட்டக்களப்பு மாவட்டத்தின் பின்தங்கிய பிரதேசங்களில் ஒன்றான கரவெட்டிக் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை (06) இரவு வேளையில் உள்நுழைந்த யானைகள் பாரிய தென்னை மரங்களை அடித்து வீழ்த்தியுள்ளன.

இந்நிலையில் இரவு வேளையில் அடிக்கடி உள்நுழையும் யானைகள் விவசாய நிலங்களை சேதப்படுத்துகின்றன.

இதன் காரணமாக தாம் பயத்தின் மத்தியிலேயே வாழ்வை நடத்த வேண்டிய துர்ப்பாக்கிய நிலை காணப்படுவதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுவிடயத்தில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.