கிராம சேவகர்கள் திங்கட்கிழமை (12) முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் குதித்த உள்ளதாகவும், அந்த போராட்டம் இரண்டு நாட்களுக்கு நீடிக்கும் என்றும் எச்சரித்துள்ளனர்.
இதன்படி திங்கட்கிழமையும் (12) செவ்வாய்க்கிழமை (13) சேவையில் ஈடுப்படப்போவதில்லை என குறிப்பிட்டுள்ளனர்.
கொழும்பில், ஞாயிற்றுக்கிழமை (11) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே, கிராம உத்தியோகத்தர் தொழிற்சங்க கூட்டணியின் இணைத் தலைவர் நந்தன ரணசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.