இலங்கை ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை கணிப்பது மிகவும் கடினம் -ஜப்பான் தூதுவர்

 


இலங்கை ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை கணிப்பது மிகவும் கடினம்என இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மிசுகோசி ஹிடேகி பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்.

இலங்கையுடன்இராஜதந்திர உறவுகளை நாங்கள் ஆரம்பித்த காலம் முதல் அனைத்து அரசாங்கங்களுடனும் நாங்கள் சிறந்த உறவை கொண்டிருக்கின்றோம். எனினும் அனைத்தும் புதிய அரசாங்கத்தை பொறுத்தது. பொருளாதா கொள்கையில் தொடர்ச்சி பேணப்படும் என நான் எதிர்பார்க்கின்றேன்.

இலங்கை தான் ஏற்றுக்கொண்ட சர்வதேச நாணயநிதியத்தின் சீர்திருத்த திட்டங்களை தொடர்ந்தும் முன்னெடுக்கும் என்ற எதிர்பார்ப்பின் அடிப்படையிலேயே கடன்மறுசீரமைப்பு தொடர்பான உடன்படிக்கை கைசாத்திடப்பட்டது.

ஜப்பான் மாத்திரமல்ல கடன்மறுசீரமைப்பிற்கு இணங்கிய ஏனைய அனைத்து நாடுகளும் இந்த அனுமானத்தின் அடிப்படையிலேயே அதற்கு ஆதரவளித்தன.

கொள்கையில் தொடர்ச்சி காணப்பட்டால் இலங்கை மக்களிற்கு மாத்திரமல்ல முதலீட்டாளர்களிற்கும் அதனால் நன்மை ஏற்படும் என அவர் தெரிவித்துள்ளார்.