ஈரான் புதிய அதிபர் பதவியேற்பு விழாவுக்கு சென்ற. ஹமாஸ் தலைவர் வான் தாக்குதலில் உயிரிழந்தார். இந்த படுகொலையை அரங்கேற்றியது இஸ்ரேல் என ஹமாஸ் அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.
விருந்தினராக வந்தவரை கொன்ற இஸ்ரேலை பழிவாங்கு வோம் என ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா அலி காமேனி கூறியுள்ளார்.
இஸ்ரேல் மீது ஹமாஸ் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் திகதி நடத்திய தாக்குதலில் 1,200 பேர் கொல்லப்பட்டனர், 250 பேர் பிணைக் கைதிகளாக அழைத்துச் செல்லப்பட்டனர்.
இந்த தாக்குதலுக்கு காரணமான ஹமாஸ் அமைப்பின் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியா உள்ளிட்ட தலைவர்களை கொல்வோம் என இஸ்ரேல் ஏற்கெனவே கூறியிருந்த நிலையில்,ஹமாஸ் தலைவர் கொல்லப்பட்டுள்ளார். அத்துடன் இஸ்ரேல் காசா மீதும் நடத்திய பழிவாங்கும் தாக்குதலில் 30,000க்கும் மேற்பட்ட மக்கள் படுகொலை செய்யப்பட்டுல்ளனர்.
மேலும் காசாவில் கடந்த ஏப்ரல் மாதம் இஸ்ரேல் நடத்திய விமான தாக்குதலில் இஸ்மாயில் ஹனியாவின் 3 மகன்கள் மற்றும் 4 பேரக் குழந்தைகள் உயிரிழந்தனர்.
இந்நிலையில், ஈரான் புதிய அதிபர் மசூத் பெஸ்கியான் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியா, ஈரான் தலைநகர் டெஹ்ரானுக்கு சென்றிருந்த போது அவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
ஹனியேவின் மரணத்தை அடுத்து மத்திய கிழக்கில் பதற்றம் நிலவுகிறது. பதற்றத்தைக் குறைக்க அமெரிக்கா வேண்டுகோள் விடுத்துள்ளதுடன், பதிலடி கொடுக்க வேண்டாம் என ஈரான் மீது அழுத்தத்தை அதிகரித்துள்ளது.
ஈரான் இஸ்ரேல் மீது நேரடித் தாக்குதலை நடத்தக்கூடும் என்ற அச்சத்தை டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் வெளிப்படுத்தியுள்ளது.
தாக்குதல் நடந்தால் இஸ்ரேலை அமெரிக்கா பாதுகாக்கும் என்று அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லாயிட் ஆஸ்டின் கூறியதையும் டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் வெளியிட்டுள்ளது.
இருப்பினும் ‘மத்திய கிழக்கில் விரிவான போர் ஏற்படும் என நான் நினைக்கவில்லை’ என அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லாயிட் ஆஸ்டின் தெரிவித்துள்ளார்.