மட்டக்களப்பு கல்லடி புதுமுகத்துவாரம் இக்னேசியஸ் வித்தியாலயத்தில் குடிநீர் இணைப்பு வழங்கி வைப்பு!
















 




(கல்லடி செய்தியாளர்)
 

 

லீலாவதி அறக்கட்டளையினால் மட்டக்களப்பு கல்லடி புதுமுகத்துவாரம் புனித இக்னேசியஸ் வித்தியாலயத்துக்கான குடிநீர் விநியோகம்  இன்று புதன்கிழமை (07) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

வித்தியாலய அதிபர் பி.தங்கவேல் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்,லீலாவதி அறக்கட்டளைச் செயலாளர் திருமதி  தர்ஷினி  ஹரிஹரன்  ,உபதலைவர் ந..ஹரிதாஸ் மற்றும் செயற்குழு உறுப்பினர்களான திருமதி திலகவதி ஹரிதாஸ் , திரு ச , சந்திரகுமார், திரு க . கபிலேந்திரன்   ஆகியோரும்  இக்குடிநீர் விநியோகத் திட்ட அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் அறக்கட்டளை அமைப்பின் உறுப்பினர்கள்,பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.