ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாச ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்தமையினை முன்னிட்டு கட்சியின் மட்டக்களப்பு கிரான்குளம் அலுவலகத்தில் பட்டாசு கொளுத்தி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதுடன் பொதுமக்களுடன் கலந்துரையாடலும் இடம்பெற்றது.
மட்டக்களப்பு தேர்தல் தொகுதியின் அமைப்பாளர் தயானந்தன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
சஜித் பிரேமதாசர் அவர்கள் தனது வேட்பு மறைவினை தாக்கல் செய்துவிட்டு வெளியே வருகை தரும் அந்த நேரம் கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என ஒன்றிணைந்து அவருக்கு ஆதரவளிக்கும் முகமாக பட்டாசுகளை கொளுத்தி ஆரவார கோஷங்களையும் எழுப்பியவாறு தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர்.
இதனைத் தொடர்ந்து கட்சியின் அலுவலகத்தில் கலந்து கொண்ட அனைவரிடமும் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரங்கள் மற்றும் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க வேண்டிய தேவை தொடர்பிலும் கலந்துரையாடல் இடம் பெற்றது.
இதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு தேர்தல் தொகுதி அமைப்பாளர் தயானந்தன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்.....
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் பக்கத்தை விட ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசா அவர்களின் பக்கம் அதி உயர் பாராளுமன்ற உறுப்பினர்கள் இலங்கையில் இருக்கின்ற அனைத்து கட்சிகளும் நாளுக்கு நாள் ஒன்று கூடிக் கொண்டு இருக்கின்றார்கள் வாக்கு வங்கி அதிகரித்துக் கொண்டிருக்கின்றது.
உண்மையில் எங்களுடைய வெற்றி உறுதிப்படுத்தப்பட்ட வெற்றி.
கடந்த காலங்களைப் பார்க்கின்ற வேளையில் இந்த நாட்டை கடந்த காலங்களில் ஆண்டவர்கள் மகிந்த ராஜபக்ச குடும்பத்தினர் ராஜபக்ச குடும்பத்தில் இருந்து இந்த அரசாங்கத்தை பொறுப்பெடுத்தவர் ரணில் விக்ரமசிங்க எனவே இந்த ஆட்சியானது ரணில் ராஜபக்ஷ ஆட்சி என்று தான் கூற வேண்டும்.
மக்கள் மிகவும் நிதானமாகவும் அவதானமாகவும் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் ஏன் என்றால் ரணில் விக்ரமசிங்கவிற்கு அளிக்கின்ற வாக்கானது ராஜபக்ஷவுக்கு அளிக்கின்ற வாக்காகவே கருதப்படும்.
இந்த நாட்டில் உள்ள அனைத்து மக்களும் ஒன்றிணைந்து வடக்கு கிழக்கு தமிழ் முஸ்லிம் மக்கள் அநேகமானோர் சஜித் பிரேமதாசவுக்கு வாக்களிக்க வேண்டும் கடந்த காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தை பொறுத்தவரையில் இரண்டு லட்சத்து 83 ஆயிரம் வாக்குகள் சஜித் பிரேமதாசா அவர்களுக்கு வழங்கப்பட்டது எனவே இம்முறை வெற்றி வாகை சூடுகின்ற இந்த வேலை 3 லட்சத்துக்கு மேற்பட்ட வாக்குகளை எமது மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தமிழ் முஸ்லிம் சகோதரர்கள் அனைத்து ஆதரவாளர்களும் ஒன்றிணைந்து வாக்களிக்க வேண்டும் என தெரிவித்தார்.