பொது வேட்பாளர் விடயம் எப்பொழுதும் தமிழ் மக்களின் பூரண ஆதரவு கிடைக்காது- சாணக்கியன்

 

 


 இலங்கை தமிழரசு கட்சியை பொறுத்த அளவில் தமிழ் பொது வேட்பாளர் தொடர்பாக நாங்கள் கட்சியாக எந்த ஒரு முடிவையும் எடுக்கவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்தார்.

இன்று (09) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை தமிழரசு கட்சியாக நாங்கள் ஒரு பொது வேட்பாளரை முன் நிறுத்துவது என்பது அறிந்த விடயம், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 11 ஆம் திகதி தமிழரசு கட்சியின் மத்திய செயல் கூட்டம் கூட தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் இது தொடர்பாக ஒரு முடிவை எடுப்போம்.

ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தையும் குழி தோண்டி புதைக்கும் விடயமாக மாறிவிடும் இந்த பொது வேட்பாளர் விடயம் எப்பொழுதும் தமிழ் மக்களின் பூரண ஆதரவு கிடைக்காது.

இது ஒரு தேவையில்லாத விடயம் என அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயமாகும். தங்களுடைய தனிப்பட்ட இலாபங்களுக்காக இந்த விடயத்தை முன்னெடுத்து வருகிறார்கள் என தெரிய வருகிறது.

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவு யாருக்கு என்பது தமிழ் தேசிய கூட்டமைப்பாக கூடி தான் ஒன்றாக முடிவெடுக்க வேண்டும் இலங்கையில் வாழும் அனைத்து மக்களுக்கும் சிறப்பான எதிர்காலத்தை அமைக்க கூடிய ஒருவருக்கு நாங்கள் நிச்சயமாக ஆதரவு வழங்க வேண்டும் எதிர்வரும் காலங்களில் ஒரு தீர்மானத்தை எடுப்போம் என தெரிவித்தார்.