ஆகஸ்ட் மாதத்திற்கான எரிபொருள் விலை திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது. ஏற்கனவே உள்ள விலைகளுக்கே எரிபொருட்கள் விற்பனை செய்யப்படவுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
இதன்படி,
92 ரக ஒக்டேன் பெற்றோல் லீற்றரின் விலை 344 ரூபாய்.
ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றரின் விலை 379 ரூபாய்.
ஓட்டோ டீசல் லீற்றரின் விலை 317 ரூபாய்.
லங்கா சுப்பர் டீசல் 4 ஸ்டார் யூரோ 4 இன் லீற்றர் ஒன்றின் விலை 355 ரூபாய்.