ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளும் தினத்தில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் பாதுகாப்பு தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
கொழும்பு மாவட்டத்தின் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கும் இடையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதேவேளை, தேர்தல் சட்டங்கள் மற்றும் ஊடக விதிமுறைகளை அமுல்படுத்துவது தொடர்பான செயலமர்வு (09) காலை அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது.
இதன்போது கருத்து தெரிவித்த தேர்தல்கள் ஆணைக்குழுவின் பிரதித் தேர்தல் ஆணையாளர் (தேர்தல் சர்ச்சைத் தீர்வு) பியூமி ஆடிகல, சமூக ஊடகங்கள் தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், இதன் காரணமாகவே தேர்தல் காலத்தில் சமூக ஊடகங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
"இன்ஸ்டாகிராம் மற்றும் டிக் டோக் சமூக ஊடகங்கள் தொடர்பில் நாங்கள் விசேட கவனம் செலுத்தியுள்ளோம். அந்த நிறுவனங்களுடன் நாங்கள் நேரடி தொடர்பில் இருக்கிறோம். சமூக ஊடக ஒழுங்குமுறையில் நாங்கள் பிறப்பித்த அறிவுறுத்தல்கள் மற்றும் உத்தரவுகளுக்கு இணங்கவில்லை என்றால், மரபுகளுக்கு அப்பால் சென்று எங்களுக்கு ஆதரவளிக்க அவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.