கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்த கப்பலில் இன்று (11) அதிகாலை ஏற்பட்ட தீ விபத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்குமாறு துறைமுக அதிகார சபை அதிகாரிகளுக்கு விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அறிவித்துள்ளார்.
கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்த கப்பலில் திடீரென தீ பரவியதையடுத்து துறைமுகத்தின் தீயணைப்புத் பிரிவின் தீயை அணைத்தனர்.
சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் உள்ள கப்பல் நிறுவனம் ஒன்றிற்கு சொந்தமான கப்பல் சிங்கப்பூர் துறைமுகத்தில் இருந்து கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
அதிலிருந்து 995 கொள்கலன்கள் இறக்கப்படவிருந்த அதேவேளை,, 880 கொள்கலன்கள் ஏற்றப்படவிருந்ததாக துறைமுக அதிகாரசபை தெரிவித்துள்ளது.