புதிதாக திறக்கப்பட உள்ள மதுவிற்பனை நிலையத்தை திறக்க வேண்டாம் , பிரதேச மக்கள் மற்றும் பொதுஅமைப்புகளின் பிரதிநிதிகள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

 


மன்னார் - தலைமன்னார்  பகுதியில் புதிதாக திறக்கப்பட உள்ள மதுவிற்பனை நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பிரதேச மக்கள் மற்றும் பொதுஅமைப்புகளின் பிரதிநிதிகள் இணைந்து எதிர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த போராட்டமானது, இன்றைய தினம் (30) காலை மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் இடம்பெற்றுள்ளது.

இதன்போது கருத்துத் தெரிவித்த போராட்டக்காரர்கள், மன்னார் நகர பகுதியில் ஏற்கனவே ஒரு மதுவிற்பனை நிலையம் அமைக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.