நாட்டை மீட்டெடுத்து ரணில் விக்கிரமசிங்கவை இன்று முழு இலங்கை மக்களும் ஆதரிப்பது என்று தீர்மானித்துள்ளனர்- ராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன்

 


 

 வரதன்

 

 

நாட்டை மீட்டெடுத்து ரணில் விக்கிரமசிங்கவை இன்று முழு இலங்கை மக்களும் ஆதரிப்பது என்று தீர்மானித்துள்ளனர் ஜனாதிபதி தேர்தலில் எமது மாவட்ட மக்கள் என்பது சதவீதத்திற்கு அதிகமான வாக்குகளை அளித்து அவரை வெற்றி பெறச்  செய்வார்கள் -ராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன்
ஏன் நாம் இந்த முறை ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க வை ஆதரிக்க வேண்டுமென்று சிந்திக்க வேண்டும்

 கடந்த காலங்களில் நாடு இருளில் இருந்த போது அதனை வைத்து அரசியல் செய்து கொண்டிருந்த தலைமைகளுக்கு மத்தியில் நாட்டிற்கு ஒரு வெளிச்சத்தை ஏற்றிய தலைவராக தற்போதைய ஜனாதிபதி முன் வந்தார்
அதற்கு எமது மாவட்ட மக்கள் அவருக்கு நன்றி கடன் செலுத்த கடமைப் பட்டுள்ளோம்

 எதிர்க்கட்சித் தலைவர் பிரச்சனைகளை வைத்து அரசியல் செய்து  கொண்டிருந்தார் அனுரகுமார திசாநாயக்கா பிரச்சனைகளை ஏற்படுத்திய தலைவராக காணப்பட்டார் ஆனால் யாருமே இதற்கான தீர்வுகளை கொண்டுவர முயற்சிக்கவில்லை

 இவ்வாறான காலகட்டத்தில் நாட்டை மீட்டெடுத்து பொருளாதாரத்தை கட்டி எழுப்ப துணிச்சலாக முன் வந்தவர் தான் தற்போதைய ஜனாதிபதி இதனால்தான் இன்று முழு இலங்கை மக்களும் ரணில் விக்கிரமசிங்க வை ஆதரிப்பது என்று தீர்மானித்துள்ளனர்


 ஜனாதிபதி தேர்தலில் முக்கிய வேட்பாளர்கள் கூட எமது ஜனாதிபதியின் சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும். இல்லாவிட்டால் நாட்டிலுள்ள அனைத்து மக்களும் அவரது சின்னத்தை தேடி செல்ல வண்டி வரும்

 ஜனாதிபதி தேர்தலில் எமது மாவட்ட மக்கள் என்பது சதவீதத்திற்கு அதிகமான வாக்குகளை அளித்து அவரை வெற்றி பெறச்  செய்வார்கள் என ராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் இன்று மட்டக்களப்பில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.