FREELANCER
வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஒழுங்கு படுத்தலில் நீதிக்கான பயணம் எனும் தொனிப்பொருளில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குடும்ப இளையோரின் ஓவிய கண்காட்சி நிகழ்வு (2024.08.29) காலை மட்டக்களப்பு காந்தி பூங்காவில் முன்னெடுக்கப்பட்டது .
இந்த ஓவிய கண் காட்சியின் நோக்கம் காணாமல் ஆக்கப்பட்ட குடும்பங்களுடைய இரண்டாம் தலைமைத்துவ இளைஞர்கள் எதிர்காலத்தில் தமது உறவுகளைத் தேடுகின்ற அல்லது என்ன நடந்தது என்கின்ற உண்மையை கண்டறிகின்ற பயணத்தில் தேடுதல் முயற்சியை முன்னெடுப்பதற்காக செயல் படுகிறோம் .அதில் முதல் கட்டமாக காணாமல் ஆக்கப்பட்ட குடும்பங்கள் தொடர்பாக இந்த குடும்பங்களின் இளைஞர்களின் ஆழ்மனதில் இருக்கின்ற வலிகள் சித்திரங்களாக இங்கு காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன ,எங்கள் வீட்டின் அரசனாக , தேவதைகளாக இருந்த எங்களின் ஒவ்வொரு உறவையும் தொலைத்து விட்டு இன்றுவரை கிடைக்குமா என்று ஒரு வேதனையில் தேடிக்கொண்டு இருக்கிறோம். இற்றைக்கு 2500 நாட்களை கடந்து தாய்மார் தந்தைமார் வீதிகளில் இறங்கி போராடிக்கொண்டு இருக்கிறார்கள்
இதுவரை எந்த முடிவும் கிடைக்கப்பெறவில்லை . உறவுகளை தேடிய தாய்மார்கள் 200-பேர் இறந்து விட்டார்கள் என கண்காட்சி ஏற்பாளர்களில் ஒருவரான கணபதி பிரசாந்த் குறிப்பிட்டார் .
ஓவியக் கண்காட்சியில் 150 இற்கு மேற்பட்ட ஓவியங்கள் இளையோர்களால் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
பாடசாலை மாணவர்கள், சமூக பற்றாளர்கள் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் உறவினர்கள் , பொதுமக்கள் என பலரும் கண்காட்சியியை பார்வையிட்டனர் .