லிட்டில் பேர்ட் வை.எம்.சி.ஏ முன்பள்ளி மாணவர்களின் வருடாந்த விளையாட்டுப் போட்டி (10) மட்டக்களப்பு - சீலாமுனை யங் ஸ்டார் விளையாட்டுக் கழக மைதானத்தில் இடம்பெற்றது.
லிட்டில் பேர்ட் வை.எம்.சி.ஏ முன்பள்ளி அதிபர் திருமதி ம.காளிதாஸ் தலைமையில் இடம்பெற்ற இந்த விளையாட்டு விழாவுக்கு மட்டக்களப்பு வலயக் கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் திருமதி அனுரேகா விவேகந்தன் பிரதம அதிதியாகவும், மட்டக்களப்பு முன்பள்ளி கல்வி பணியக கள உத்தியோகத்தர் சாம்பசிவம் பரணீதரன் மற்றும் மட்டக்களப்பு பிரதேச செயலக ஆரம்பகால சிறுவர் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருச்செல்வம் மெஹராஜ் . ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்த விளையாட்டுப் போட்டி விழாவில் ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் நலம் விரும்பிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தமையும் குறிப்பிடத்தக்கது.