மட்டக்களப்பில் ஆடிப் பூரத்தை முன்னிட்டு பாற்குடப்பவனி!




 

 

 







 
 
 

(கல்லடி செய்தியாளர்)

ஆடிப்பூர தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு ஆனைப்பந்தி பிள்ளையார் ஆலயத்திலிருந்து மட்டக்களப்பு கொத்துக்குளம் மாரியம்மன் ஆலயத்துக்கு பெண்கள் இன்று புதன்கிழமை (07) பாற்குடம் ஏந்திப் பவனியாகச் சென்றனர்.

இதன்போது ஆனைப்பந்தி பிள்ளையார் ஆலயத்திலிருந்து மட்டக்களப்பு மணிக்கூட்டுக் கோபுரம் வழியாக திருமலை வீதியையடைந்து,அங்கிருந்து கொத்துக்குளம் மாரியம்மன் ஆலயத்தை மேற்படி பாற்குடப்பவனி சென்றடைந்தது.

இப்பாற்குடப் பவனியில் கலந்து கொண்ட பெண்கள் மஞ்சள் நிற பட்டாடை அணிந்திருந்தனர்.

இவர்களால் எடுத்துச் செல்லப்பட்ட பால் மாரியம்மனுக்கு விஷேட பூஜை நிகழ்த்தப்பட்டு அபிஷேகம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.