இலங்கைக்கு இறக்குமதி செய்வதற்கு தடை செய்யப்பட்ட விவசாய இரசாயனப் பொருட்களுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 


இலங்கைக்கு இறக்குமதி செய்வதற்கு தடை செய்யப்பட்ட ஒரு தொகை விவசாய இரசாயனப் பொருட்களை முச்சக்கர வண்டியில் ஏற்றிச் சென்ற மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திவுலபிட்டிய பொலிஸ் நிலைய அதிகாரிகள் உரிய சுற்றிவளைப்பை மேற்கொண்டு சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.

இந்த விவசாய இரசாயனப் பொருட்கள் ஒவ்வொன்றும் 500 பொதிகள் அடங்கிய 10 பெட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அவற்றின் பெறுமதி சுமார் 475,000 ரூபா என பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 39, 45 மற்றும் 55 வயதுடைய கொழும்பில் வசிக்கும் நபர்கள் எனவும் தெரியவந்துள்ளது.