அரச பணியாளர்கள் தங்களது பணி நேரத்தில் தனிப்பட்ட சமூக வலைதள கணக்கு களிலோ அல்லது வேறு எந்தக் கணக்குகளையாவது பயன்படுத்தி அரசியல் கட்சி மற்றும் வேட்பாளரை ஊக்குவிக்கும் அல்லது பாரபட்சம் காட்டுவது போன்ற பிரச்சாரம் செய்வது கடுமையான குற்றமாகும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும், அவ்வாறு செய்பவர்கள் 3 வருட சிறைத்தண்டனை அல்லது ஒரு லட்சம் ரூபாவிற்கு குறையாத அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் செப்டெம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை கருத்திற் கொண்டு வெளியாகியுள்ள இந்த சுற்றறிக்கையில் அரசியல் உரிமைகளை இழந்த அரசு அதிகாரிக்கும் கூட இந்த நடைமுறை பொருந்தும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது