கடற்றொழிலாளர் பிரச்சனைகளை நாட்டின் அரசாங்கம் ஏற்றுக் கொண்டிருக்கின்றது அதை நடைமுறைப்படுத்தவில்லை, எனவே அதை நடைமுறைப்படுத்துவதற்காக நாம் செயற்பட வேண்டும் என தேசிய கடற்றொழில் ஒத்துழைப்பு இயக்கத்தின் தலைவர் ஹேமன்குமார தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் இடம்பெற்ற தேசிய கடற்றொழில் ஒத்துழைப்பு இயக்கம் மற்றும் கடற்றொழில் சம்மேளங்களின் உறுப்பினர்கள் கலந்துகொண்ட ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.