அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆமை வட்டை வயல் பிரதேசத்தில் வயல் வேலைக்குச் சென்ற ஒருவர் யானை தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்த சம்பவம் புதன்கிழமை (28) காலை இடம்பெற்றுள்ளது.
நிந்தவூர் - 02 இரண்டாம் குறுக்குத் தெரு பிரிவைச் சேர்ந்த திருமணமாகாத 62 வயது மதிக்கத்தக்க மீராலெப்பை முகம்மது முஸ்தபா என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்மாந்துறை நீதிமன்ற நீதிவானின் கட்டளையின் பிரகாரம் பிரதேச மரண விசாரணை அதிகாரி அப்துல் ஹமீட் அல் - ஜவாஹிர் சம்பவ இடத்திற்குச் சென்று மரண விசாரணை மேற்கொண்ட பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.