அரிச்சந்திரன் டிசாலினி
இரண்டாம் வருட கல்வியியல் சிறப்பு கற்கை மாணவிகல்வி பிள்ளை நலத்துறை
கிழக்குப் பல்கலைக்கழகம்.
-------------------------------------------
"இயக்கவியல் உலகில் மானிடத்தின் இயங்கு தன்மைக்கு மூல அத்தியாயமாக இருப்பது தொழிற்பாடங்களின் பிரவேசம் ஆகும்'' எனும் கூற்றை முன்னிலைப்படுத்தி இன்றைய நவீன உலகில் கல்வி என்பது ஓர் அடிப்படை விடயமாக இருந்தாலும் கல்வியின் மிக முக்கிய நோக்கம் தொழிலாகும். எனவே தொழிலை மூலக்கல்லாக கொண்டு நகர்ந்து கொண்டு இருக்கும் இந்த உலகில்" எமது நாடு விதிவிலக்கல்ல''இந்த தொழிற்பாடங்களின் தேவை தொழிற் பிரவேசம் என்னும் எண்ணக் கருவில் இலங்கையில் நோக்கப்படுகின்றன. இதன் படி எமது பாடசாலை கல்வியில் அறிவுசார் விருத்தி இதிறன்சார் விருத்திஇ பண்புசார் விருத்திஇ எனும் அடிப்படையில் தொழில் பாடங்களின் ஊடாக தொழில்சார் திறன்களும் விதைக்கப்படுகின்றன. பாடசாலை சமூகத்தின் பல்வேறு மாணவர்களின் தொழிற் திறன்களை மேம்படுத்துவதற்கு அத்திவாரமாக அமைவது பாடசாலை கற்றலில் இணைக்கப்பட்டிருக்கும் தொழிற் பாடங்கள் ஆகும். இதன்படி பாடசாலை கல்வி அமைப்பில் மாணவர்களின் தொழிற்சார்ந்த திறன்களை தொழிற் பாடங்களின் ஊடாக மேம்படுத்துவதற்கு எத்தகைய முன்னெடுப்புகள் காணப்படுகின்றன என்பதை நாம் நோக்குதல் அவசியம் ஆகும்.
பாடசாலை சூழலில் மாணவர்கள் எதிர்காலத்தில் சிறந்த தொழில் வல்லுனர்களாத் திகழ்வதற்கு அவரவர் தொழில் சார்ந்த திறமைகளை விருத்தி செய்யும் நோக்கில் வழங்கப்படும் கல்வி முறை தொழிற்கல்வி ஆகும்." தொழில் என்பது தற்போது பணியாற்றும் அல்லது பணியாற்றஎதிர்பார்க்கும் அனைவருக்கும் ஆன சந்தர்ப்பமாகும்''எனும் கூற்றிக் கிணங்க ஒரு மாணவனுக்கு எதிர்காலத்தில் தமது தொழில் சார்ந்த நகர்வினை ஊக்கப்படுத்தி வழிப்படுத்தி முன்னேற்ற பாதையில் ஊடுருவிச் செல்வதற்கு கல்வியின் தொழில் பாடங்களின் ஊடாக தொழில் சார் திறன்கள் விருத்தி செய்யப்பட வேண்டும்.
இவ்வாறான தொழில் கல்விகள் பல்வேறு துறைகளின் ஊடாக வழங்கப்படுகின்றன.
குறிப்பாக கணினிஇ மின்னியல்இ சுற்றுலாத்துறைஇ விவசாய துறைஇ தொழில்நுட்பம்இ தோட்டக்கலைஇ சாரதி இபொறியியல்
முதலானவற்றை குறிப்பிடலாம் . இவ்வாறான தொழில் சார்ந்த திறன்கள் தொழில்நுட்ப கல்லூரிகள்இ தொழில் பயிற்சி நிறுவனங்கள்இ அரசு சார்பற்ற நிறுவனங்கள்இ பல்கலைக்கழகங்கள்இ
முறைசாரா கல்வி முறை ஊடாக இத்தொழில் கல்வியை வழங்குகின்றன. எவ்வாறாக இருப்பினும் பாடசாலை கல்வியில் தொழிற் பாடங்களின் ஊடாக தொழிற்கல்வி எவ்வாறு விருத்தி செய்யப்படுகிறது என்பது முக்கியத்துவம் பெறுகிறது.
தொழிற்பாடங்களின் ஊடாக தொழில் சார்ந்த திறன்களை மேம்படுத்துவதில் மையக்கல் பாடசாலை ஆகும் .வெறுமனே மனப்பாடம் செய்யும் கல்வி முறைக்கு பதிலாக தொழில் ரீதியான கல்வியை வழங்குவதன் மூலம் இயக்கத்திறன் மிக்க மாணவ சமூகத்தை உருவாக்கிக் கொள்ள முடியும் .அந்த வகையில் பாடசாலையில் அறிவு சார்ந்த மற்றும் பண்பு சார்ந்த திறன் விருத்தி செயற்பாடுகளைப் போன்று தொழிற்சார் திறன் விருத்தியும் ஊக்குவிக்கப்பட வேண்டும். இதனை தொழிற்பாடங்களின் ஊடாகவும் அதனோடு தொடர்புடைய ஏனைய செயற்பாடுகளின் ஊடாகவும் நிறைவேற்றலாம்.
இன்றைய பாடசாலை சமூகத்தில் தொழில் ரீதியான பாடங்கள் மாணவர்களுக்கு புகட்டப்படுகின்றன .இதன்படி 2007 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட செயல்முறை தொழில்நுட்ப பாடம் இது தரம் 6 தொடக்கம் 9 வகையான மாணவர்களுக்கு கற்பிக்கப்படுகின்றன மற்றும் ஒன்பது தொழில்நுட்ப பாட நெறிகள் பத்து தொடக்கம் 11ஆம் தரங்களில் அறிமுகம் செய்யப்பட்டது.(வுநுஊர்ஐNஐஊயுடு டீயுளுமுநுவு ளுலுளுவுநுஆ) மேலும் இன்றைய தொழில்முறையில் அதிக ஆதிக்கம் செலுத்தும் ஆங்கில மொழி பிரதான பாட பிரிவாக கற்பிக்கப்படுகின்றது .அத்தோடு தரம் 6 முதல் 13 வரையான மாணவர்களுக்கு ஐஊவுபாடம் கற்பிக்கப்படல்இமனையியல்இ தொடர்பாடல்இ டீயுஊர்நுடுழுசு ழுகு வுநுஊர்Nழுடுழுபுலு ஐN ஐNகுழுசுஆயுவுஐழுN Nடீவுநுஊர்Nழுடுழுபுலு(டீ.வுநுஊர் ஐவு) இ சுகாதாரம்இ வாழ்க்கை தேர்ச்சி இபோன்ற பாடங்களின் ஊடாக தொழில் கல்வி புகட்டப்படுகின்றன.
உலகில் சிறந்த கல்வியை வழங்கும் முன்னணி நாடான பின்லாந்து மாணவர்களுக்கு இடைநிலை கல்வியில் மூன்று வருட தொழில்சார் திறன் விருத்தி கல்வியை வழங்குகிறது. இச் செயற்பாடு பாடசாலை கல்வியில் தொழில் சார் திறன்களை வளர்ப்பதன் முக்கியத்துவத்தை புலப்படுத்துகிறது. 1983இல் அறிமுகப்படுத்தப்பட்ட வெள்ளை அறிக்கையின் பிரதான கருப்பொருளாக விளங்கியது மாணவர் தொழில் சார் விருத்தியாகும். இதன் பிரதிபலிப்பே இலங்கை கலைத்திட்டத்தில் வாழ்க்கை தேர்ச்சி பாடத்தின் அறிமுகமாகும்.
இவ்வாறு தொழிற்பாடங்களின் ஊடான தொழில்கல்வி பிரவேசத்தில் தொழில்கல்வி ரீதியான ஓர் திருப்புமுனை 2017-ல் அறிமுகப்படுத்தப்பட்ட 13 வருட கால உத்தரவாதம் அளிக்கப்பட்ட கல்வி முறையாகும். இக்கல்வி திட்டத்தின் கீழ் கா. பொ. த சாதாரண தரத்தில் சித்தி பெறாத மாணவர்கள் உட்பட அனைத்து மாணவர்களுக்கும் தொழில் சார் திறன்களை வழங்கும் சிறப்பான திட்டம் அமுல்படுத்தப்பட்டன. இதன்படி 26 தொழில் முறை பாடங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதுஅவற்றுள் உணவு பதப்படுத்துதல்இ உலோக கட்டுமான கல்விஇ மென்பொருள் அபிவிருத்திஇ அலுமினியம் கட்டுமான கல்விஇ மாதிரி உணவு சமைத்தல்இ தோட்டக்கலைஇ சுற்றுலாத்துறை சார்ந்த கல்விஇ முதலான பாடங்களாகும்.
இவ்வாறான பாடத்திட்டங்கள் வாயிலாக மட்டுமல்லாமல் கல்விக்கும் பயிற்சிக்கும் இடையில் ஒரு இசைவிப்பை ஏற்படுத்துவதற்காக மேலும் பல செயற்பாடுகள் இடம்பெறுகின்றன. குறிப்பாக தொழில்சார் கண்காட்சிகள் இடம்பெறுதல்.( 2023 ஆம் ஆண்டு மேல்இ தென் மாகாணங்களில் இடம்பெற்றதுஇ வட மாகாண கைத்தொழில் துறை அப்பகுதி உற்பத்திகளை மையப்படுத்தி நடத்திய கண்காட்சி) இதன் மூலம் மாணவர்களுக்கு தங்களின் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பமாகவும்இ புதிய விடயங்களை உள்வாங்கிக் கொள்வதற்கான வாய்ப்பாகவும் உள்ளது. மேலும் புகைப்படக்கலை திறமை கொண்ட மாணவர்களுக்கு நெசன தொலைக்காட்சி அலைவரிசை போட்டி நடாத்தி ஒளிபரப்பாகியதுஇயுடுடு ஐளுவுயுNனு வுநுடுநுNவு னுநுஏநுடுழுPஆநுNவு Pசுழுபுசுயுஆஆநு குழுசு ளுஊர்ழுழுடு ஊர்ஐடுனுசுநுN போட்டிஇ பரிசோதனை முறைகள்இ சம்பவ பகுப்பாய்வு முறை இதொழில் சந்தைஇ செய் வழி ஆய்வுகள் இதொழில் திறன்கருத்தரங்குகள் இஎன்பவற்றின் ஊடாக பயிற்சியுடன் கூடியதான தொழிற்கல்விகள் வழங்கப்படுகின்றன.
பாடசாலை கலைத்திட்டத்தில் தொழிற் பாடங்களின் ஊடாக வழங்கப்படும் தொழிற்கல்வியின் மூலம் ஓர் இயங்கு தன்மை கொண்ட மாணவச் சமூகத்தை உருவாக்கிக் கொள்ள முடியும். அதாவது பல்வேறுபட்ட தொழிற் பாடங்கள் மாணவர்களுக்கு தெரிவாக காணப்படும் போது குறித்த தொழிற் பாடங்களின் ஊடாக தங்களது சக்தியை உச்ச நிலையில் பிரயோகித்து தொழில் சார் திறன்களை வளர்ப்பதோடு எதிர்காலத்தில் அவர்களின் பொருளாதாரத்திலும் தடங்கலற்ற விருத்தியை ஏற்படுத்த முடியும். மேலும் நிலை பேறான உந்து சக்தியாக திகழக்கூடியதும்இ பயனளிக்கக் கூடியதுமான ஜீவனோ ப பாயத்தை ஏற்படுத்திக் கொள்ளலாம்.
இன்றைய அபிவிருத்தி அடைந்து வரும் காலகட்டத்தில் "மனித சமூகத்தின் தேவையும் ஓட்டமும் தேங்கி நிற்கும் நிலையில் இல்லை" எனவே உயிர்த்துடிப்பு மிக்கதும் இயக்கத் திறன் கொண்டதுமான மாணவச் சமூகத்தை மிளிர வைப்பதற்கு தொழிற்பாடுகளின் பிரவேசம் இன்றியமையாததாகும். இத்தகைய கல்வி முறையினை மாணவச் சமூகத்திற்கு வழங்குவதில் பல சவால்களும் காணப்படுகின்றன. அந்த வகையில் இலங்கை கலைத்திட்டத்தில் தொழிற் பாடங்கள் அறிமுகப்படுத்தப்பட்டாலும் அவற்றின் பிரயோகத்தன்மை குறைவாக காணப்படல். உதாரணமாக. Pவுளு பாடத்தினை குறிப்பிட முடியும். மேலும் தொழிற் பாடங்களில் பயிற்றுவிக்கப்பட்ட திறமை வாய்ந்த ஆசிரியர்கள் காணப்படாமைஇ பின்தங்கிய கிராமப்புற பாடசாலைகளில் காணப்படும் வளப்பற்றாக்குறை செயற்பாடுகளின் தொடர்ச்சி இன்மை போன்ற இன்னும் அநேக காரணங்களினால் மாணவர்களுக்கு தொழிற்கல்வி வழங்க முடியாமல் அவர்கள் எதிர்காலம் கேள்விக்குறியாக நிற்கின்றன.
இவ்வாறான பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் போது வினைத்திறனான முறையில் தொழில் கல்வியை வழங்க முடியும். அந்த வகையில் பாடசாலை மட்டத்தில் ஆசிரியர்களை தொழிற் பாடங்கள் ரீதியாக பயிற்றுவிப்பதற்கான வளவாளர்களை அழைத்து கருத்தரங்குகளையும் பயிற்சிகளையும் வழங்குதல்இ மாணவர்களுக்கு தொழிற்கல்வியின் தாற்பரியத்தை அறிய செய்தல்இ பழைய மாணவர்களிடமிருந்து நிதி உதவிகளை பெற்றுக் கொள்ளல்இ ஆய்வு கூடங்களை பாடசாலையில் நிறுவுதல் போன்ற முன்னெடுப்புக்களின் ஊடாக மேற்படி பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும்.
ஆகவே இலங்கை பாடசாலை கல்வி கட்டமைப்பில் மாணவச் சமூகத்திற்கு தொழிற்பாடங்களின் ஊடான தொழில்கல்வி வழங்கப்பட்டு வருகின்றன .இவற்றில் பல நிறை சில குறைகள் காணப்பட்ட போதிலும் இவை எல்லாவற்றையும் தாண்டி தொழிற்கல்வியை புகட்டும் போது திறன்களின் உச்சநிலையில் நின்று பிரகாசிக்கும் மாணவச் சமூகத்தின் ஊடாக அபிவிருத்தி அடைந்த வளமான நாட்டுக்கு வழிவகுக்கும் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.