ஜனாதிபதித் தேர்தலில் அதிக வேட்பாளர்கள் போட்டியிட்டால் வாக்குச் சீட்டுகளை அச்சிடுவதற்கு செலவிடும் பணம் அதிகரிக்கும்


 

 

ஜனாதிபதித் தேர்தலில் அதிக வேட்பாளர்கள் போட்டியிடுவதன் மூலம் வாக்குச் சீட்டுகளை அச்சிடுவதற்கு செலவிடும் பணமும், வாக்குகளை எண்ணுவதற்கு செலவிடப்படும் பணமும் அதிகரிக்கும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

இதற்கு மேலதிகமாக ஏனைய செலவுகளும் அதிகரிக்கலாம் என இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.