நாட்டு மக்கள் படும் துன்பங்களை நான் நன்கு புரிந்து கொண்டுள்ளேன்’- ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

 


“இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் நான் ஏன் கட்சி சார்பற்ற வேட்பாளராக போட்டியிடுகிறேன் என்று சிலர் என்னிடம் கேட்கிறார்கள். பசி கட்சி சார்பற்றது. எந்தக் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் பசி உணரப்படுகின்றது. வயிற்றைப் பட்டினி இன்றி நிரப்புதல் நடுநிலையானது’ என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மீண்டு வரும் நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தி முன்னேற்றத்திற்கு இட்டுச் செல்லும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் திட்டத்திற்கு தமது பூரண ஆதரவை வழங்குவதாக பெண்கள் அமைப்புக்களின் பிரதிநிதிகள் உறுதிமொழி வழங்கினர்.

இந்நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அரசியல் கட்சி நிற பேதங்களை ஒதுக்கி வைத்துவிட்டு, நாட்டு மக்களின் வயிற்றை நிரப்ப ஒன்றிணைய வேண்டும். இந்நாட்டு மக்கள் படும் துன்பங்களை நான் நன்கு புரிந்து கொண்டுள்ளேன்’ என்று மேலும் தெரிவித்துள்ளார்.