இந்தியாவின் நாகப்பட்டினத்திற்கும் மற்றும் இலங்கையின் காங்கேசன்துறைக்கும் இடையே பயணிகள் கப்பல் சேவை அடுத்த வாரம் ஆரம்பமாகும் ?

 


இந்தியாவின் நாகை – இலங்கையின் காங்கேசன்துறை இடையே பயணிகள் கப்பல் சேவை அடுத்த வாரம் முதல் மீண்டும் ஆரம்பிக்கவுள்ளது.

கடந்த வருடம் இந்தியாவின் நாகப்பட்டினத்திற்கும் மற்றும் இலங்கையின் காங்கேசன்துறைக்கும் இடையே ஆரம்பிக்கப்பட்ட பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை பல முறை இடைநிறுத்தப்பட்ட நிலையில், அடுத்த வாரம் முதல் மீண்டும் கப்பல் சேவை ஆரம்பிக்கவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அந்தமானில் இருந்து நாக்கை வந்த ‘சிவகங்கை கப்பல்’ நாளை மறுநாள் இலங்கைக்கு சோதனை பயணமாக வருகைத் தரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.