சாதாரணதர பரீட்சையின் விடைத்தாள்களை மீள் திருத்தம் செய்வதற்கான விண்ணப்பங்கள் ஒக்டோபர் 01 முதல் ஒக்டோபர் 15ஆம் திகதி வரை ஏற்றுக் கொள்ளப்படும்

 


சாதாரணதர பரீட்சையின் விடைத்தாள்களை மீள் திருத்தம் செய்வதற்கான விண்ணப்பங்கள் ஒக்டோபர் 01 முதல் ஒக்டோபர் 15ஆம் திகதி வரை ஏற்றுக் கொள்ளப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இணையவழி ஊடாக உத்தியோகபூர்வமாக நேற்று நள்ளிரவு வௌியாகி இருந்தது.

இம்முறை நாடளாவிய ரீதியில் 452,979 விண்ணப்பதாரர்கள் பங்குபற்றியதோடு, சாதாரணதரப் பரீட்சை நாடளாவிய ரீதியில் 3,527 நிலையங்களில் நடைபெற்றது.

387,648 பாடசாலை விண்ணப்பதாரர்களும் 65,331 தனியார் விண்ணப்பதாரர்களும் இதில் உள்ளடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது வௌியாகியுள்ள பெறுபேறுகள் தொடர்பில் மேலதிக தகவல்களைப் பெற விரும்பினால் 1911 அல்லது 011 2 785 922, 0112 786 616, 011 2 784 208 அல்லது 011 2 784 537 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைக்குமாறும் பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.