ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய விசேட தினமாக எதிர்வரும் 14 ஆம் திகதி சனிக்கிழமை உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுகள் விநியோகிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.