எதிர்வரும் 21ஆம் திகதி
ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், 16
இலட்சம் பேர் வெளிநாடுகளில் தொழில் புரிந்து வருவதாக வெளிநாட்டு
வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
மேலும் பதிவு செய்யப்பட்டுள்ள மொத்த வாக்குகள் 1 கோடியே 71 இலட்சம் என தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை கடந்த ஜனாதிபதி தேர்தலில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கையை பார்க்கும்போது இம்முறை 11 இலட்சம் மேலதிக வாக்காளர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.
ஆனால், பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்காளர்களின் 16 இலட்சம் பேர் வெளிநாடுகளில் தொழில் புரிந்து வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாக்களிக்க இலட்சத்துக்கும் அதிகமானோர் இலங்கை வந்திருந்ததாகக் கூறப்படுகின்றது. ஆனால் இம்முறை தேர்தலில் வாக்களிக்க வருகை தருவோர் மிகவும் குறைவாகவே இருப்பர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.