காஸாவில் 17,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலியாகியுள்ளனர்.

 


காஸாவில் போர் ஆரம்பித்து முதலாம் ஆண்டு முடிவடைய உள்ள நிலையில், கல்வியின்றி மாணவர்கள் தத்தளித்து வருகின்றனர்.

இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் காஸாவில் 70% பள்ளிகள் சேதமடைந்துள்ளன. மேலும் 6,25,000 மாணவர்கள் எந்தவிதமான கல்வி சேவையுமின்றி போர்ச் சூழலில் வாழ்ந்து வருகின்றனர்.

தற்போதுவரை காசா மீதான இஸ்ரேலின் போரில் 41,118 பேர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 95,125 பேர் காயமடைந்துள்ளனர்.

இதில் கிட்டத்தட்ட 17,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலியாகியுள்ளனர். காஸாவில் தற்போது இறந்த குழந்தைகளில் இது 2.6 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.